Sunday, March 6, 2011

கனவுகளை நனவாக்கும் கல்விச் செல்வம்..!!





இந்திய அரசு நிர்வாகம் தொடர்பான முக்கிய பதவிகளுக்குக்கான நுழைவு தேர்வை மத்திய அரசின் UPSC வருடா வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷனர்), சுங்கத்துறை (கஸ்டம்ஸ்), வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான (IAS, IPS, IFS உள்ளிட்ட)  முதல் கட்ட நுழைவு தேர்வு Civil Services Preliminary Examination 2011  விண்ணப்பம் தற்போது  விநியோகிக்கப்பட்டு வருகின்றது. தேர்வை பற்றிய முழு விபரம் கீழே: 

இந்தியாவையே நிர்வகிக்கும் முக்கிய அரசு பதவிகளுக்கான தேர்வு என்றும் இதை சொல்லலாம். முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதற்கும், உரிமைகள் நசுக்கப்படுவதற்கும் இது போன்ற மாவட்ட ஆட்சியர், காவல் துறை ஆணையர், காவல் துறை கண்காணிப்பாளர் போன்ற உயர் பதவிகளில் முஸ்லீம்கள் இல்லாததே அல்லது மிக குறைவாக இருப்பதே காரணம்.  இந்த தேர்வை எழுதி வெற்றி பெறுவதன் மூலம் நாமும்  மாவட்ட ஆட்சியராகவும், காவல் துறை ஆணையராகவும், உள்துறை, உளவுத்துறை என இந்தியாவின் முக்கிய அதிகார பொறுப்புகளில் அமர முடியும்.  இந்த தேர்விற்கான கட்டணம் வெறும் ரூ.70 தான். இப்படி அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு. முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே..!!

இது வெறும் தேர்வு அல்லது வேலை மட்டும் அல்ல. இதன் மூலம் நீங்கள் அதிகாரம் படைத்த பதவிகளில் இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்த பணிகளில் சேர்வதன் மூலம் நமது சமுதாயத்திற்கு பாதுகாப்பும், உரிமையும் பெற்றுத் முடியும். குஜராத்திலும், கோவையிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும்,  அவ்வளவு ஏன்.. சமீபத்தில் நம் ஊரில் கூட நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கோர தாக்குதலுக்கு இந்த துறைகளில் நாம் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம்.  நம் சமுதாய முன்னேற்றத்திற்கும், பாதுகாப்பிற்கும் இது போன்ற தேர்வுகளில் நமது சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்று இது போன்ற பதவிகளில் அமருவதின் மூலமே நமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இன்னும் எத்தனை காலம் தான் நாம் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று வாழ்வது..?  நமது உரிமையை மீட்க, சமுதாயத்திற்கு பாதுகாப்பு வழங்க நாமும் உயர் பதவிகளில் அமர்வோம்.. வாருங்கள்..!!

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருக்கிறது. காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுங்கி விடுவதாலும் தான். உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்த தேர்வுகள் கடினமில்லை.  இது போன்ற தேர்வுகளை எழுதி உயர் பதவிகளில் இருப்பவர்கள் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லிகொள்பவர்கள். இதற்கு அவர்கள் செய்யும் முதல் வேலை IAS, IPS போன்றதேர்வுகள் மிக மிக கடினமானவை என்றும், சாதாரண மக்கள் இந்த தேர்வுகளை எழுத முடியாது என்ற மாயையை பரவ விட்டிருப்பது. இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய மாணவர்களின் தன்னம்பிக்கையை தகர்ப்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதையும் அவர்கள் தந்திரமாக செய்து வருகிறார்கள்.

இதை மாற்ற நாமும் UPSC (IAS, IPS) தேர்வு எழுதி தேர்ச்சி  பெற  வேண்டும். தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள். எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க இறைவன் இருக்கின்றான், அவன் மீது நம்பிக்கை வைத்து, கடினமாக உழைத்து படியுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்..!!

இந்த தேர்விற்கு எப்படி தயாராவது?
இந்த தலைப்பிலே பல புத்தகங்கள் புத்த கடையில் கிடைக்கும்.  பொதுவாக பயிற்சி நிறுவங்களில் சென்று பயிற்சி பெறுவதன் மூலம் எளிதில் இந்த தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம். தமிழகத்தில் சென்னை சைதாபேட்டையில் உள்ள மனித நேய அறகட்டளை நடத்தும் பயிற்சி மையம் இது போன்ற தேர்வுகளுக்கு பிரசித்தி பெற்றது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாகவும் பயிற்சி அளிக்கின்றனர். முஸ்லீம்களில் சிலர் Civil Services Examination பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றனர்.  சிலர் துவங்க இருகின்றனர். குறிப்பாக சென்னையில் கிரசென்ட் கல்லூரியில் ஒரு பயிற்சி மையமும், சகோ. M.F. கான் அவர்கள் நடத்தும் ஒரு பயிற்சி மையமும் உள்ளது.  கள்ளக்குறிச்சியில் சகோ. ரஹ்மதுல்லாஹ் நடத்தும் பயிற்சி மையம் உள்ளது.  பொருளாதாரத்தில் பின் தங்கிய முஸ்லீம் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுவதாக சகோ. ரஹ்மதுல்லாஹ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பயிற்சி மையங்களுக்கு பஞ்சமில்லை, பணமும் ஒரு பிரச்சனை இல்லை (இலவச பயிற்சிகள் பல நடத்தப்படுகின்றன). வேறு என்ன குறை..? தகுதி உள்ள முஸ்லீம் மாணவர்கள்தான் குறை. முஸ்லீம் மாணவர்களிடம் இதில் தேர்ச்சி பெறும் அளவிற்கு அறிவு இருக்கின்றது. ஆனால் தன்னம்பிக்கைதான் இல்லை. இலக்கை அடையும் வரை தேவையான பொறுமையும் இல்லை. முஸ்லீம்களில் படிப்பவர்களே குறைவு. அதுவும் படித்துவிட்டு தன் படிப்புக்கேற்ற தகுதியான வேலை பார்ப்பவர்கள் மிக குறைவு. இதை நிலை மாற வேண்டும். முஸ்லீம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டும். பொறுமையை போதிக்க வேண்டும். நாம் சாப்பிட பிறந்தவர்கள் இல்லை, சாதிக்க பிறந்தவர்கள் என்ற உணர்வை சிறுவயதிலேயே அவர்களுக்குள் விதைக்க வேண்டும். உணவு, இருப்பிடம் என்பது வாழ்கையின் ஒரு பகுதி தானே தவிற வாழ்க்கையே அதுவல்ல. முஸ்லீம்கள் தங்களின் இந்த குறுகிய சிந்தனையை விட்டு வெளியே வர வேண்டும். அதற்கு தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி பற்றிய விழிப்புணர்வும், ஊக்கமும், வழிகாட்டலும், பயிற்சியும் அளிக்க வேண்டும்.

இந்த தேர்வை பற்றிய முழு விபரங்கள் அறியவும், தேர்விற்கு தயாராவதற்கான வழிமுறைகள் பற்றி அறியவும்  Sithiqu.mtech@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.

Civil Services Examination - 2011
- இந்த தேர்வை பற்றிய விபரம்.

இது 3 கட்டங்களாக நடைபெறும் தேர்வு. முதல் கட்ட தேர்வு, இரண்டாம் கட்ட தேர்வு எழுத்து தேர்வாகும்.  மூன்றாம் கட்ட தேர்வு நேர்முக தேர்வாகும். முதல் கட்ட தேர்வு தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும். தேர்விற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி : 21 மார்ச், 2011

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : 

 அனைத்து இந்திய தபால் அலுவலகங்கள்

கட்டணம் : 

விண்ணப்பத்தின் விலை  ரூ.20 மற்றும் தேர்வு கட்டணம் ரூ.50.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Secretary,
Union Public Service Commission,
Dholpur House, Shahjahan Road,
New Delhi - 110069

 
தேர்வு நடைபெறும் தேதி :
12 ஜூன், 2011

வயது வரம்பு :
33 வயது (முஸ்லீம்கள் உட்பட) பிற்படுத்தபட்ட வகுப்பினர்களுக்கு.
பொது பிரிவினருக்கு 30 வயது

தேர்வு எழுத தேவையான தகுதி :
ஏதாவது ஒரு பட்டப் படிப்பு படித்து இருக்க வேண்டும். கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.






முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்..!!
 



0 comments:

Post a Comment