நம் ஊரில் ஜனவரி 28-ம் தேதியன்று இந்து முன்னணி சார்பில் அவ்வமைப்பின் கொடி ஒன்று நம் ஊர் பேருந்து நிலையம் அருகில் ஊன்றப்பட்டது. பிப்.8-ந்தேதி அன்று விஷமிகள் சிலர் அக்கொடியினை அறுத்து இருக்கின்றனர் (கலவரம் ஏற்படுத்த இந்து அவர்களே செய்திருக்கவும் வாய்ப்பிருப்பதை தெரிவிக்க விரும்புகிறோம்). இதை முஸ்லிம்கள் தான் செய்ததாக கூறி 8 முஸ்லிம்களின் பெயரை கூறி சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் இந்து முன்னணியினர்.
பிப்.11 அன்று இப்பிரச்சனையை பற்றி பேசுவதற்காக முஸ்லிம்களின் தரப்பிலிருந்து ஜமாஅத் உறுப்பினர்கள் உட்பட சில நபர்கள் காவல் நிலையத்திற்கு வருகின்றனர், அதே சமயம் இந்துக்கள் சார்பில் கொஞ்சம் பேர் அங்கு வருகின்றனர். இன்ஸ்பெக்டர் இல்லாத காரணத்தால் சப்-இன்ஸ்பெக்டர் ஹேமலதா அவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப் பேச்சில் ஈடுபடுத்துகின்றார்கள். முஸ்லிம்கள் தங்களது பக்கம் நியாயம் இருப்பதாகவும், இந்தப் பிரச்சனைக்கு முஸ்லிகள் யாரும் காரணம் இல்லையென்றும், வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்திருக்கும் ”பாலா” என்ற இந்துத்வவாதி இந்த ஊருக்கு திரும்பி வந்த பின்பு தான் இது போன்ற செயல்கள் நடப்பதாக தங்கள் ஊர் நிலையை கூறியவுடன் அத்தனை பேரும் ஏற்றுக் கொண்டு சமாதான நிலைக்கு வருகின்றனர்.
அந்த சமயம், நெடு நாட்களாக முஸ்லிம்களின் ஜும் ஆ பள்ளிக்கு எதிரில் இருக்கும் கோவிலில் தொழுகை நேரத்தில் ஒலித்து வரும் பாடல்களை நிறுத்தக்கோரி விண்ணப்பித்தும், அதை தொடர்ந்து செய்து வருவதாகவும், முஸ்லிம்களின் இறை வழிப்பாட்டிற்கு அது இடையூறாக இருப்பது பற்றி கூறி இப்பிரச்சினையை தீர்த்து வைக்கக் கோரினர்.
அப்பொழுது வேலு என்பவர், நாங்கள் பாட்டை நிறுத்த முடியாது, நீங்கள் வேண்டுமானால் தொழுகையை நிறுத்துங்கள் என்று கூற ஆரம்பித்ததும் , முஸ்லிம்கள் மனம் புண்பட்டு வந்திருந்த முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் கண்டனங்களை எழுப்புகின்றனர். நிலவரம் சரியில்லாமல் போவதைக் கண்ட காவல்துறையினர் பிப்.13 அன்று இரு தரப்பினரையும் வைத்து சமாதானக் கூட்டம் நடத்துவதாக அறிவித்து விட்டு அன்றைய கூட்டத்தை கலைத்து விடுகின்றனர். முஸ்லிகள் அனைவரும் பிப்.13 அன்று காவல் துறையால் ஏற்படப்போகும் தீர்வை எதிர்நோக்கி இருக்கும் பொழுது எதிர் தரப்பு பாசிஸ்டுகளின் சதிவேலையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கிறது. பிப்.11 அன்று இரவே இந்து மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லக் கூடாது என்று இந்து முன்னணி சார்பில் இரகசியமாக தடை விதிக்கப்படுகின்றது.
பிப்.12 பகல் 3.00 மணி வரை ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. மக்கள் அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். அன்று மாலை தொழுகை (அஸர்) ஆரம்பிக்கும் நேரத்திற்கு சற்று முன்னர், ஒரு சுமோ, ஒரு கார் மற்றும் 5 அல்லது 6 பைக்குகளில் தம்பிக்கோட்டை, மற்றும் பட்டுக்கோட்டையில் இருந்து இந்து முன்னணியினர் புதுப்பட்டினம் வந்து சேருகின்றனர்.
முஸ்லிம்கள் எப்போதும் போல் அஸர் தொழுகைக்கு பள்ளிக்கு சென்றுவிட்டு வெளியில் வருகையில் 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் மஸ்ஜிதிற்கு எதிரில் நின்று கொண்டு ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டு வெளியே வருபவர்களை பழிக்கின்றனர். மேலும் முஸ்லிம்களின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்துகின்றனர். இதனை கண்ட முஸ்லீம் சிறுவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் அனைவரும் தாக்குதலை எதிர் கொள்ள வேண்டி இந்து முன்னணியினரை திருப்பித் தாக்குகின்றனர். இதில் முஸ்லிம்களின் தரப்பில் 5 பேரும் இந்து முன்னணி தரப்பில் 12 பேரும் காயம் அடைகின்றனர். இத்ரீஸ் அஹ்மது என்ற 11-வது படிக்கும் மாணவரின் மண்டை உடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகிறார்.
தகவல் அறிந்த காவல்துறை விரைந்து வந்து முஸ்லிம்களின் தரப்பில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 13 பேரை ரிமாண்ட் செய்துள்ளனர். இரண்டு பேரை தேடி வருகின்றனர். இந்து முன்னணி சார்பில் 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 10 பேரை ரிமாண்ட் செய்து 9 பேரை தேடி வருகின்றனர், வெளியூரில் இருந்து திட்டமிட்ட தாக்குதலுக்கு வந்த அத்தனை இந்து முன்னணியினரும் ஓடிப்போய் விட்டனர். தற்பொழுதும் (ஞாயிற்றுக்கிழமை) நம் ஊர் எஸ்.பி.-யின் நேரடி கண்கணிப்பில், காவல் துறையின் கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறது.



0 comments:
Post a Comment